Tuesday, April 06, 2010

ஐ.ம.சு கூ.ஆதரவாளர்களுக்கும் ஐ.தே.மு .ஆதரவாளர்களுக்கு இடையில் மன்னாரில் சற்று முன்னர் மோதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் சற்று முன் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் உப்புக் குளம் கிராமத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடும் அமைச்சர் ரிசாட்பதியுதீன் அலுவலகமும் சற்றுத் தொலைவில் எதிர் கட்சியில் போட்டியிடும் நூர்தின் மசூரின் காரியாலயங்களும்,உடைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். .

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.