சிறுவர்களை ஏற்றிக் கொண்டு பாடசாலை சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 34 சிறார்கள் காயமடைந்தனர். இவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறார்கள் பாடசாலை செல்லும் வழியில் இன்று காலை 7.45 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
பஸ் கால்வாய்க்குள் குடை சாய்ந்து வீழ்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதேச வாசிகள் சிறுவர்களை நொச்சியாகமம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் 13 சிறார்களின் நிலை கவலைக்கிடமானதையடுத்து அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பொலிஸ் குழு ஒன்று விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.