இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு மலேசிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாதகால விசா வழங்கி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் ஆறு மாத கால விசாவை பார்வதி அம்மாள் அவர்களுக்கு வழங்கியிருந்த நிலையில், இந்தியாவுக்குள் அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதிற்கான காரணம் தெரியவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தான் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமைக்கும், பார்வதி அம்மாள் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமைக்கும் இடையில்; தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.
நேற்றிரவு 10.15மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பார்வதி அம்மாள் அவர்கள், குறிப்பிட்ட விமானத்திலிருந்து இறக்கப்படாமல் அப்படியே 10.45மணி அளவில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இவரை இலங்கையிலிருந்து மலேசியா செல்வதற்காக சிங்கப்பூர் வரை கே.சிவாஜிலிங்கம் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.