திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெற்றுக் கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்கு விபரங்கள்
1. இரா.சம்பந்தன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) – 24488
2. எம்.எஸ். தௌபீக் (ஐக்கிய தேசியக் கட்சி) – 23588
3. சுசந்த புன்சிநிலமே (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) – 22820
4. எம்.கே.டி.எஸ். குணவர்தன (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) – 19734
திருகோணமலை மாவட்டத்திலும் ஆளும் கட்சி வெற்றி
இன்றைய தினம் நடைபெற்று முடிந்த மீள் வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
59784 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் 39691 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும் 33268 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மொத்தமாக 1712 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதேவேளை இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 119 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக இதுவரையில் 47 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும் ஜனநயாக தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இதுவரையில் மொத்தமாக 4808233 வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக 2345409 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி மொத்தமாக 440123 வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 233168 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.