Tuesday, March 16, 2010

மனித உரிமைகள் உரிய முறையில் பேணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்துவதற்கு அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் கோரிக்கை:

அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் உரிய முறையில் பேணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்துவதற்கு அவசரகாலச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் அகற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சிவிலியன்கள் கொழும்பிலிருந்து அகற்ற எடுத்த முயற்சியை முறியடித்தல், வீதித் தடைகளை அகற்றியமை போன்ற நடவடிக்கைகளை தாம் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளதாக அவர் சுடுடிக்காட்டியுள்ளார்.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவதற்கோ அல்லது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கோ இலங்கையில் இன்று சந்தர்ப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவோர் எதற்காக கைது செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ சட்டத்தின் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.