Tuesday, March 16, 2010

எங்கள் வலிகளை - எங்கள் திரைமொழியில் - நாமே எழுதுவோம்:- தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் - பிரான்ஸ்

லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருது குறும்படப்போட்டிக்கான அழைப்பு பாரிசில், 14.03.2010 அன்று நடைபெற்ற கலைஞர்களின் சிறப்பு ஒன்றுகூடலின்போது விடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு தோளில் ஒளிப்படக்கருவியுடனும், மறு தோளில் போர்க்களக்குருவியுடனும் ஈழமெங்கும் உலா வந்து, வியக்க வைக்கும் பல கள-கலைப் பணிகளைப்புரிந்து எல்லாளன் திரைப்படப்பிடிப்பின்போது விதையாக வீழ்ந்த போராளிக்கலைஞன் லெப்டினன்ட் கேணல் தவம் அவர்களின் நினைவாக பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் இவ்வாண்டு 2ம் தடவையாக குறும்படப்போட்டியை நடத்தவுள்ளது.

சென்றாண்டு தாயகத்தில் நிலவிய நெருக்கடிநிலை காரணமாக போட்டி நடைபெறவில்லை. இந்தியா, இலங்கை தவிர்ந்த, எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைந்து நாடுகளில் இருந்தும் படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருதுடன் பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

புலம்பெயர் வாழ்வியலையும், எமது இனத்தின் விடுதலை வேணவாவையும் எமது திரை மொழியில் பதிவு செய்வதோடு அண்மைக்காலமாக எம்மவரிடையே விசேட கவனம் பெற்றுள்ள இத்துறைசார் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டுவதாகவும், புகலிடத்தமிழர்களிடமிருந்து உன்னதமான படைப்புக்களையும், படைப்பாளிகளையும் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்ட இந்தமுயற்சியில் புலம்பெயர்ந்து வாழும் இத்துறைசார் அனைத்து கலைஞர்களையும் இணையுமாறு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு கேட்டுக்கொள்கின்றது.

எங்கள் கதைகள் கற்பனை இல்லை

எங்கள் கண்ணீர் ஒப்பனை இல்லை.

எங்கள் குருதி இன்னும் காயவில்லை.

எங்கள் வாழ்வை

எங்கள் வலிகளை

எங்கள் திரைமொழியில்

நாமே எழுதுவோம்.

எமக்காய் நாமே எழுதுவோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.