Monday, March 15, 2010

அரசாங்கமே சரத் பொன்சேகாவை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சித்தது: ஜே வி பி

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா, அரசாங்கத்தினாலேயே முதல் முறையாக அரசியல் நோக்கத்துக்காக அணுகப்பட்டதாக ஜனநாயக தேசிய கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஜே வி பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் லலித் வீரதுங்க, அரசியல் பதவி ஒன்றை வழங்குவதாக கூறி சரத் பொன்சேகாவை முதல் முறையாக அணுகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அம்பலாங்கொட தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதாக கூறி, லலித் வீரதுங்க அவரை அணுகியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் பதவியையும் வழங்குவதாக லலித் வீரதுங்க சரத் பொன்சேகாவிடம் உறுதியளித்ததாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டுவதில் தோல்வி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டமை, மற்றும் ஆயுதம் உள்ளிட்ட பொருள் கொள்வனவு தொடர்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.