ஐக்கிய தேசிய முன்னணி அவசரகாலச் சட்ட நீடிப்பு குறித்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவசர காலத்தை நீடிக்கும் நோக்கில் எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் விசேட அமர்வு ஒன்று நடைபெறவுள்ளது.
அவசர காலச் சட்ட நீடிப்பு தொடர்பிலான வாக்கெடுப்பின் போது எதிர்ப்பு வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேறும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய வேளையில் அவசரகாலச் சட்டம் நீடிப்பதற்கு எடுக்கப்படும் முனைப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியன எதிர்க்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம், முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது, அவசரகால சட்ட நீடிப்பிற்கு அதிக முக்கியத்தும் அளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பில் ஜே.வி.பி இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்ட வாக்கெடுப்பின் போது எவ்வாறான தீர்மானத்தை எடுப்பது என்பது தொடர்பில் இன்னமும் தமது கட்சி முடிவு செய்யவில்லை என கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றம் விசேடமாக கூட்டப்படவுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.