Monday, March 15, 2010

தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 20 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு : பவ்ரல்

தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 20 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான ஆசிய தேர்தல் வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாத முதலாம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, ஆப்கானிஸ்தான், பர்மா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஆயிரக்கணக்கான உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.