Tuesday, February 23, 2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, வவுனியா, யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல்

கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்று வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

வவுனியாவில் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவின் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு பெண் வேட்பாளர் உட்பட்ட 9 பேர் இந்த வேட்பு மனுப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நேசராசா கயல்விழி என்ற பெண் உட்பட்டோர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், கந்தையா அருமைலிங்கம் தலைமையிலான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12 பேரைக்கொண்ட இந்த வேட்பு மனுப்பட்டியலில் நான்கு பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

ருக்மணி தங்கராஜா, சுப்பிரமணியம் பவானி, சித்திரவடிவேல் சிவாநந்தி மற்றும் நல்லசேகரன் சரோஜாதேவி ஆகியோரே அவர்களாவர்.

இதனை தவிர ஆண்கள் தரப்பில், முத்து கணேசலிங்கம், மனோஹர் ஹரிகரன், தினகரன்பிள்ளை பிரசாத், முகாந்திரம்பிள்ளை கராதாஸ், சுப்பிரமணியம் யோகநாதன், வடிவேல் ரமேஸ்குமார், சுந்தரராஜ் சௌந்தரராஜ் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை, 4 சுயேட்சைக்குழுக்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. அரசியல் கட்சிகளில் முதன் முதலாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.