Sunday, January 31, 2010

பிரான்சில் நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரன் நினைவு வணக்கம்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தன்னையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தைசெய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனுக்கு பிரான்சு வாழ் தமிழர்கள் நினைவு வணக்கம் செய்தனர்.

பிரான்சில் தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதியான லா சப்பலில் வர்த்தகநிறுவனங்களின் ஏற்பாட்டில் மாலை 18.00மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனில் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வணக்க நிகழ்விற்க்கு வருகை தந்திருந்த மக்கள் மலர் வணக்கம் செலுத்தினார்கள்.

கைகளில் சுடர்கள் ஏந்தியிருந்த மக்கள் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனின் நினைவுகள் சுமந்து நெக்குருகி நின்றதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.