இலங்கை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பல மாநாடுகளில் கலந்து கொண்டு உணர்வுபூர்வமான உரைகள் ஆற்றியவருமான அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் திடீர் என நம்மை விட்டு பிரிந்து சென்ற செய்தியை அறிந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு கணேசலிங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழந்தவரும் இலங்கை சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும், ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்ற நல்நோக்கோடு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பல தடவைகள் வன்னிக்குச் சென்ற சந்தித்து தமிழர் பிரச்சனைகள் பற்றி உரையாடியவரும் நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பல மாநாடுகளில் கலந்து கொண்டு உணர்வுபூர்வமான உரைகள் ஆற்றியவருமான அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் திடீர் என நம்மை விட்டு பிரிந்து சென்ற செய்தியை அறிந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.
ஜேர்மனியிலிருந்து அவர் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-
அமரராகிவிட்டு பெரியசாமி; சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமல்ல உலகத் தமிழர்கள் பிரச்சனைகள் தொடர்பாக மிகுந்த கரிசனையும் கவனமும் கொண்டவர். நமது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் உலகின் பல நாடுகளிலும் நடத்திய மாநாடுகளில் கலந்து கொண்டு பல முக்கிய உரைகளை ஆற்றியவர். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் நடைபெற்ற பண்பாட்டுக் இயக்கத்தின் மாநாட்டில் ஆற்றிய உரை விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் பாராட்டிப் பேசும் உரையாக அமைந்தது.
தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து கண்டித்தும் அவர் அங்கு உரையாற்றினார். இலங்கையின் அமைச்சராக இருந்தும் அவர் அவ்வாறு பேசியது குறித்து அவர் கொழும்பு திரும்பியதும் அவரை ஜனாதிபதி மகிந்தா மிகவும் கடிந்து கொண்டதாகவும் அமைச்சர் பதிவியை பறிக்கவுள்ளதாகவும் எச்சரித்ததாக திரு சந்திரசேகரன் என்னிடம் தெரிவித்திருந்தார். இவ்வாறு தனது சொந்த நலனிலும் பார்க்க தமிழர் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு மலையத்தலைவரை நமது தமிழர் சமூகம் இழந்த விட்டது.
இதே போன்று தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும் அவர் கலந்து கொண்டு முக்கியமான உரைகளை ஆற்றினார்.
நமது பண்பாட்டு இயக்கத்தின் மாநாடுகளில் கலந்து கொள்ள வரும்போது அவர் தனியாக வருவதில்லை. இலங்கையிலிருந்து அறிஞர்கள் மற்றும் தொழிற்சங்கத் பிரதிநிதிகளை அழைத்து வந்து நமது பண்பாட்டு இயக்தத்தின் பெருமைகளை சொல்லி மகிழ்ந்து போவார்.
அடிக்கடி என்னோடு தொடர்பு கொண்டு பண்பாட்டு இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி உரையாடுவார். இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு உற்ற நண்பனையும் ஆதரவாளன் ஒருவரையும் இழந்து தவிக்கின்றது”
இவ்வாறு திரு கணேசலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா உதயன்






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.