Friday, January 22, 2010

ஊடகவியலாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த மகிந்த


"ராஜபக்சா குடும்பத்தினருக்கு எதிராக பல ஊழல், மோசடிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன" இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என லக்பிம நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் ராஜபால் அபேநாயக்க ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியதாகவும், இதனால் கோபமடைந்த மகிந்த குழப்பமடைந்து சத்தமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சனாதிபதியினால் நேற்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே கேள்விகள் எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலேயே அபேநாயக்க ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

கோபமடைந்த ஜனாதிபதியை அமைதிபடுத்த அவரது ஆங்கில ஊடகப் பணிப்பாளர் லூசான் ராஜகருணாநாயக்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சற்று அமைதியடைந்த தனக்கு சற்று கோபம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். நீங்கள் கோபப்படவில்லை எனில் மேலும் தேவையான சில கேள்விகளைக் கேட்கவேண்டியிருப்பதாக ராஜபால் மீண்டும் கூறியுள்ளார்.

இதனையடுத்து எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் தன்னிடம் கேட்டுகுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். இதனையடுத்து நாட்டில் திறமையான நிர்வாகிக்கள் இருக்கும்போது ராஜபக்சா குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய பதவிகளில் நியமிக்கப்படுவது ஏன் என ராஜபால் மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஆத்திரமடைந்துள்ள ஜனாதிபதி அரசசார்பற்ற நிறுவனங்களையும், எதிர்க்கட்சியினரையும் கடுமையாக திட்ட ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் ஊடகங்களுடனான கலந்துரையாடலை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.