தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு நோர்வே தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.விடுதலை வேட்கையுடன் தமிழர் தம் உரிமைக்காவும், மாண்பிற்காகவும் தொடர்ந்து போராடிய ஒரு உன்னத தலைவரை தந்த அவருக்கு சிரம் தாழ்த்தி எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தள்ளாத வயதில், உடல் நலம் குன்றிய நிலையில் இராணுவ தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இருந்திருக்கவில்லை. அதனை அவர்களுடைய மனித உரிமைக்கு எதிரானதும், சட்டவிரோதமானதுமான செயலாகவே கருதவேண்டும்.
கௌரவமாக அவர்கள் தங்களது பிள்ளைகளுடன் வதிவதற்கு ஆய ஒழுங்குகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தியாவும், சர்வதேச சமூகமும், ஐ.நா.வும் இவ்விடயத்தில் கவனம் எடுக்காதது விசனத்துக்குரியது.
அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் துணைவியாருக்கும், குடும்பத்தினர்க்கும் மீண்டும் எமது அனுதாபத்தினைத் தெரிவிக்கின்றோம்.
திரு. காசி. சிவபாலன்
தலைவர், நோர்வே தமிழ்ச் சங்கம்
ஒஸ்லோ






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.