Wednesday, December 30, 2009

கியூ பிரிவின் விசாரணைச் சான்றிதழ் அடிப்படையில் அகதிகள் இலங்கை திரும்புகின்றனர்

இலங்கைப் போர் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்றவர்கள் பல ஆண்டு காலமாக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பல இலங்கையிலுள்ள தமது சொத்து நிலைவரங்களை அறிவதற்காக ஒருவழி கடவுச் சீட்டுடன் நாடு திரும்புகின்றனர் எனக் கூறப்படுகிறது.

 இவ்வாறு இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து இலங்கையில் சுமுகநிலை காணப்படுகின்றதால், தமிழகத்தில் உள்ள இந்த இலங்கை அகதிகள் தமது உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து அறிவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே தாமாகவே இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் கியூப் பிரிவுப் போலீஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விசாரணைகளின் பின்னர் கியூ பிரிவினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ் அடிப்படையிலேயே, அவர்கள் இலங்கை திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுவும் அவர்களுக்கு ஒருவழி கடவுச் சீட்டு வழங்கப்பட்டே அனுப்பப்படுகிறது.

ஆனால் இந்த கியூ பிரிவு அனுமதிச்சீட்டை வாங்குவதற்கு இலங்கை அகதிகள் அலைக்கழிக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாக சென்னையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.