யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர் கொழும்பில் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது
கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த செல்வகுமார் சத்தியதீபன் என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கடந்த 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இதுவரை தகவல்கள் எவையும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்திருந்த போதும் இந்த சம்பவம் மீண்டும் வடக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.