சிறீலங்காவின் முன்னாள் அதிபரும் பின்னாளில் மகிந்த கூட்டணியால் தூக்கி எறியப்பட்டவருமான சந்திரிக்கா வரும்மாதம் நடைபெறவுள்ள சிறீலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த சந்திரிக்கா மீண்டும் நாடு திரும்பி அரசியலில் ஈடுபடமாட்டார் என கருத்துக்கள் நிலவி வந்த சந்தர்ப்பத்தில் இக்கருத்து பெரும் அச்சத்தை மகிந்த தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் உருவாக்கப்ட்டடுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக சரத்துக்கு சந்திரிக்கா அதரவு தெரிவிக்கமுன்வந்துள்ளதாகவும் இதை மங்கள சமர வீர முன்னின்று ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி கூட்டணியினர் வரும் மாத ஆரம்பத்தில் சந்திரிக்கா மேடைகளில் தேர்னறுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
சுpல் காலத்துக்கு முன்னர் தான் மகிந்தவை அரசியலுக்குள் கொண்டு வந்தது முதல் மிகவுமு; பாரதூரமான முன்று தவறுகள் செய்துள்ளதாகவும் தக்க தருணம் வரும் போது அதை வெளியிடவுசுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
இதே வேளை சில மாதங்களுக்கு முன்னர் நடந்த மாகாண சபைத் தேர்தலிகளில் சந்திரிக்காவை நிறுத்த ஐக்கிய தேசியக்கட்சி முனைந்த போது ஐக்கிய தேசியக்கட்சியின் கொடி மற்றம் இலட்சினையை மாற்றுமாறு சந்திரிக்கா கோரியிருந்ததாக செயிதிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.