Saturday, December 05, 2009

இலங்கை அரசின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை ஜனவரி மாதம் அயர்லாந்தில்

இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நடைபெறவுள்ளது.

ஜனவரி மாதம் 14 ம் 15 ம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவதானிப்புகளை மேற்கொண்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமித்த பிரபலமானவர்களின் குழுவின் உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த முறைப்பாடுகளை இந்த விசாரணையின் போது வெளிப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை விடவும் காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அமைப்பு உட்பட பல மனித உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகளின் சார்பிலும் பலர் இந்த விசாரணைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜேந்தர் சச்சாரம் இந்த விசாரணையில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.