எதிர்வரும் 12ம், 13ம திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தலின் பங்கு கொண்டு வாக்களித்து பெரு வெற்றியை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தாயத்திற்கு பெற்றுக்கொடுக்குமாறு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பான தமிழீழ மக்களே!
1948 ம் ஆண்டு இலங்கைதீவு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அந்ந மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ்மக்களாகிய எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் போராடியதும், அதனை இலங்கை பேரினவாத அரசுகள் வன்முறைமூலம் எமது போராட்டத்தை ஒடுக்கியதால் 1976ம் ஆண்டிலிருந்து எமது உரிமையை மீட்டெடுப்பதற்காகவும், எமது அடையாளங்களை காப்பதற்காகவும் ஆயுதப்போராட்ட தமிழ் மக்களின் பேரதரவுடன், அர்ப்பணிப்புடனும் ஆரம்பிக்கப்பட்டது.
நேர்த்தியான தலைமையினாலும் உயிர் அர்ப்பணிப்பினாலும் மண்ணின் மானம் காக்க எதையும் இழக்க தயாரான சந்ததியின் போராட்டத்தை சர்வதேசம் பயங்கரவாத என்கின்ற முத்திரையை குத்தி இன்று அதை இல்லாதொழித்துள்ளது. இந்த வகையில் தான் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப்பெற ஐனநாயகவழியில் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த செயற்பாடுகளைச் செய்வதற்காகவும் இதுவரை காலமும் தமிழ் மக்களின் இறையாண்மையை பெறுவதற்காக செயற்பட சகல தமிழ் அமைப்புக்களும் இணைந்த நாடு தழுவிய ரீதியல் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பேரவை என்ற அமைப்பினை உருவாக்கியதனூடாக வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஏற்று இறைமையுள்ள தமிழீழ தாயகத்தை நிறுவுவதோடு தமிழரின் பாரம்பரிய கொடியான புலிச்சின்னத்தை கொண்ட கொடியே தமிழரின் தேசியக்கொடி என்ற கொள்கையோடும் செயற்படுவதோடு எமது தேசிய ஆன்மாவின் சிந்தனைக்கு அமைய பாதைகள் வேறாயினும், பயணமும், இலட்சியமும் ஒன்றாகவே அமையும் பட்சத்தில் நாடுகடந்த தமிழீழ அரசுஇ உலகத்தமிழர் பேரவையுட்பட ஏனைய அமைப்புகளுடன் இந்த மக்கள் பேரவை இணைந்து செயற்படும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் மக்கள் பேரவையின் அடிப்படை கொள்கைகளாக அமைவதோடு மக்கள் பேரவையில் உள்ள உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக கருதப்படுவர்.
இவ்வாறு இவ் ஆண்டு ஆரம்பத்தில் உருவாக்கம் கண்டுள்ள பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையான பல செயற்திட்டங்களை நடாத்தியிருந்தது. இதில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் சில பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாநில மாநகர முதல்வர்களுடன் பல்வேறு சந்திப்புகள்
அரச, அரசசார்பற்ற மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள், மனிதவுரிமைகள் அமைப்பு, எல்லைகள் அற்ற அமைப்பு போன்றவற்றுடன் சந்திப்புக்கள்.
சர்வதேச அமைப்புகளிடம் தமிழ்மக்களுக்கான மனிதாபிமான உதவி செய்யக்கோரியமை உம்(வணங்கா மண்). இலங்கை அரசிற்கு பெரும் பெருளாதார பங்களிப்பை கொடுத்து வந்த ஜி,எல்,பீரிஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட நடிவடிக்கை.
இவ்வாறாக ஏற்படுத்தப்பட்ட பல சந்திப்புக்களின் பயனாக தாயகத்தில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் எற்பட்ட தமிழ்மக்களுக்கு மேலான மனிதப்படுகொலையும், மனிதவுரிமை மீறல்களும், பேரழிவுகள் தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிரெஞ்சு அரசாங்கம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழினத்தின் பேரளிவுக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வரும் அண்மைகால செயற்பாடுகள் இலங்கை அரசை சீற்றம் கொள்ள வைத்துள்ளது. இவ்வகையான செயற்பாடுகளுக்கு உலகம் வாழ் தமிழீழ மக்கள் கடும் குளிருக்கும், வெயிலுக்குள்ளும், மழைக்குள்ளும், குழந்தைகள் முதல் பெரியவர்களும் வீதிகளில் இறங்கி போராடியதும் இன்றுவரை ஒன்றுகூடல்கள் நடாத்திவருவதும் இவ்வாறான ஐனநாயக வழிப்போராட்டங்கள் எல்லாமே எல்லாநாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்ற விடயமாகவே பார்க்கப்பட்டன.
புலம் பெயர்ந்த மண்ணில் வாழும் எமது மக்களின் தாயக பற்றினை சீர்குலைக்கவும், அவர்களின் நற்பெயரினை கலங்கப்படுத்தவும், தமிழ் மக்களின் மனிதநேயப்பணியாளர்கள் கைதுகளும், அவர்கள் மீது நீதிக்கும், உண்மைக்கும் மாறான தீர்ப்பும், இன்னும் பல்வேறு திட்டமிட்ட செயற்பாடுகளையும் பின்புலமாக நின்று இலங்கை தூதரகங்களே நடாத்தி வருகின்றன.
இவர்களின் செயற்பாடுகளை புறம் தள்ளிய எமது மக்கள் கடந்த நவம்பர் 27 மாவீரர்நாள் நிகழ்வில் இதுவரைகாலமும் இல்லாத வகையில் மக்களின் வருகையும், பங்களிப்பும், உணர்வும் மெய்சிலிர்க்க வைத்துள்ளதும், தமிழீழ மக்கள்;ள பேரவையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் தம்மை அங்கத்தவர்களாகவும் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த வகையில் தற்போதைய செயற்பாடாக எதிர்வரும் 12ம், 13ம திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தலின் வேலைதிட்டங்கள் யாவும் நிறைவு பெற்றுள்ளன.
இது சம்பந்தமாக மாவட்டங்கள், மாநில, மாநகர ரீதியில் தமிழ் மக்களுக்காக சந்திப்புக்ள் தமிழீழ மக்கள் பேரவையால் தொடர்சியாகவும் மேற்கொள்ளபட்டன. இச்சந்திப்புக்களில் மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்ததும், ஐயப்பாடுகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டனர். இக்கருத்துக்கணிப்பில் இளைய சமூகத்தினர் மிகவும் கரிசணை கொண்டுள்ளதும் அதற்கான காரணம் தமது மண்ணின் விடுதலைக்காகவும், தமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் எனது வாக்கு கணிப்பு பயன்படப்போகின்றது என்பதை நினைக்கும் போது சந்தோசமாவுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியபோது அது அவர்களின் ஆனந்தக்கண்ணீரா அல்லது வேதனையின் உள்ளக்குமுறல்களா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு பல பெரியவர்களும் இதுவரை தாயகத்தில் இருக்கும் போது எவருக்கும் வாக்களிக்காதவர் தான் இப்பொழுது ஒரு நல்ல விசயத்ததிற்காக வாக்களிக்கப்போவதையும் அதனால் சந்தோசமான அந்ந நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பலர் இத்தேர்தலின் முக்கியத்துவம் கருதி வேலைதிட்டங்களை மேற்கொள்வதற்காக வந்து இணைந்து கொண்டுள்ளனர்.
இத்துடன் தமிழ்மக்களின் தொடர்பு சாதனங்கள் வரலாற்றின் கடமையை உணர்ந்து தமது பங்களிப்பை நல்கி வருகின்றன. வானொலிகள், இணையத்தளங்களில் தமிழ்மக்கள் கலந்து கொண்டு தமது ஐயப்பாடுகளையும் வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அனைத்து தமிழர் அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் நடைபெறவிருக்கும் கருத்துக்கணிப்பு தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்து பெரு வெற்றியை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தாயத்திற்கு பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.