ஓசினியானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 இலங்கை அகதிகளில் 15 பேர் நேற்று கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் குடியேறுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு பின்னரே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளான நிலையில் 78 இலங்கை அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் காப்பாற்றப்பட்டனர்.
இந்தநிலையில்,அவர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டமை காரணமாக இந்தோனேசியாவுக்கே அனுப்பப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் தீர்க்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே 15 அகதிகளும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.அதேநேரம் நியூஸிலாந்தும் நோர்வேயும் இந்த அகதிகளில் சிலரை பொறுப்பேற்க இணக்கம் வெளியிட்டுள்ளன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.