Saturday, November 14, 2009

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு : மக்கள் பாதிப்பு



யாழ்.மாவட்டத்தில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்று மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

கடந்த வாரங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவிய யாழ்.மாவட்டத்தில் நேற்று முதல் பெற்றோலுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் முண்டியடித்து வரிசையில் பெற்றோல் வாங்குவதற்காக காத்திருந்தனர். இருந்தும் பெற்றோல் முடிவடைந்ததனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முன்னர் குடாநாட்டுக்கான எரிபொருட்கள் கப்பல் மூலமே எடுத்துவரப்பட்டன. தற்போது ஏ–9 வீதியினூடாகவே எடுத்து வரப்படுகின்றன. இவ்வாறு கொண்டு வரப்படும் எரிபொருள் யாழ்ப்பாணத்தின் தேவைக்குப் போதுமானதல்ல. இதனால்தான் யாழ்.குடாநாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இனிவரும் காலங்களில், ஏ-9 வீதியினூடாகக் கூடியளவு எரிபொருட்களை எடுத்து வந்தாலே இத்தட்டுப்பாட்டை நீக்கமுடியும் என பெற்றோல் நிரப்பு நிலையத்தினர் தெரிவத்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.