Monday, November 30, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..

அக்கட்சியின் ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..

இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்.

தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .

தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.