Sunday, November 22, 2009

கருணாநிதிக்கு மனச்சாட்சியே கிடையாது ‐ வைகோ

பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்கு துன்பம் நேர்ந்தது என கூறுகிற கருணாநிதிக்கு மனச்சாட்சியே கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குற்றம்சுமத்தியுள்ளார். தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், கரிகாலன், ராஜராஜன் ஆகியோர் பெற்ற புகழை பிரபாகரன் பெற்றுள்ளார். உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் இதயங்களில் அவர் வீற்றிருக்கிறார்.

கருணாநிதியால் அவரைக் கொச்சைப்படுத்த முடியாது. உண்மையை தமிழர்கள் அறிவார்கள். முப்படைகளை அமைத்து, தமிழ் ஈழ அரசாங்கத்தை உலகம் ஏற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியவர் பிரபாகரன். போர்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகரற்ற தலைவர் அவர். 2009 ஈழப்போரில் மத்திய அரசின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டது. அதைக் கண்டு உள்மனதில் மகிழ்ச்சி அடைந்தவர்தான் கருணாநிதி.

2004‐க்குப் பிறகு 5 ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு தேவையான ஆயுதங்கள், ரேடார்கள் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு கொடுத்தது. விடுதலைப் புலிகளுக்காக வந்த 14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தது இந்திய அரசு. 5 ஆண்டுகளாக இதற்கு உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி.

தனது குடும்பத்துக்கு பதவிகளைப் பெற சோனியா குடும்பத்தினரின் ஆதரவு தேவை. அதனால் தமிழினத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப் போவதில்லை.தமிழர்களின் உள்ளத்தில் எழுந்துள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கருணாநிதி முன் வைத்துள்ளார். பிரச்னையை திசை திருப்புவதற்காக இலங்கை அகதிகள் மீது திடீரென கரிசனம் காட்டுகிறார் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.