தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள், கட்டடங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 30 ஆண்டுகளாக உழைத்த பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்குத் தேவையான சகல சர்வதேச சட்டத்தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சொத்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Responses to விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப்படும்: பாதுகாப்புச் செயலாளர்