Monday, October 19, 2009

மற்றொரு இலங்கையர், அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்

[திங்கட்கிழமை, 19 ஒக்ரோபர் 2009]

அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் அந்தஸ்த்து கோரி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். ரொசான் பெர்ணான்டோ என்ற சிங்களவரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டவராவார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரைவைக்கு அரசியல் அந்தஸ்த்து தொடர்பில் அவர் அனுப்பி இருந்த இறுதி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகம் அவரது வழக்கை ஆராயாது என தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அவரை கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

இந்த நாடுகடத்தலை தடுக்குமாறு அவரது வழக்கறிஞர் மனித உரிமைகள் ஆணையகத்திடம் கோரியபோதும் அது கைக்கூடவில்லை.

இதற்கிடையில் இலங்கையை வந்ததடைந்த அவர், அவுஸ்திரேலிய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தமக்கு இலங்கை தங்கிருப்பதற்கு துளியளவும் விருப்பம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் தலைமறைவாகவே வாழ வேண்டிய நிலை இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளையே சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவுடனேயே, தமது வீட்டுக்கு சென்ற பொலிசார் தம்மை கைது செய்ய காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னொரு முறையும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அபாயகரமான முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.