இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட படு கொலையின் ஒரு காட்சியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வாரம் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்துள்ளது. "இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது.
அதனை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. எனினும் அதனை இலங்கை அரசு மறுத்துள்ளது. காண்பவர்கள் கண்கலங்கிப் போகும் அளவுக்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளன. இந்தப் படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தபோதும் அது ஜூன் மாதம் 18 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டதாக ஒளிப்படவியல் மற்றும் கணனித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல ஆதா ரங்களை மேற்குலக ஊடகங்கள் தற்போது துணிச்சலாக வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள போதும் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து வெளியிட முடியாத நிலையில், மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேர வலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவது மிகவும் போற்றத்தக்கது.
தமிழகத் தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, தமிழ் மக்களை ஒரு மாயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது. மேற்குலக ஊடகங்கள் மட்டுமன்றி மேற்குலகத்தின் இராஜதந்திர நகர்விலும் சில மாற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசி யல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதல்கள் உரு வாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங் கைக்கான முன்னாள் அமெரிக்க துõதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் கான துணை அமைச்சருமான ரொபர்ட் ஓ பிளெக் கருத்து தெரிவித்த பின்னர் கடந்த வாரம் அமெரிக்கா மீண்டும் ஒரு எச்சரிக் கையை விடுத்துள்ளது.
அதாவது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களை அரசாங் கம் விரைவாக மீளக் குடியமர்த்தாது போனால் அனைத்துலகத்தின் ஆதரவுகளையும், உதவிகளையும் இழப் பதற்கு நேரிடும் என அமெரிக்கா தெரிவித் துள்ளது. அமெரிக்கா தனது பூகோள அரசியல் நலன் கருதி சில நட வடிக்கைகளை மேற் கொள்ள முற்பட்டு வருகின்ற போதும், அப்பாவித் தமிழ் மக்க ளின் மறுவாழ்வு தொடர்பாக அது தெரி வித்து வரும் கருத்து கள் அநாதரவாக விட ப்பட்டுள்ள இலங் கைத்தமிழ் மக்களுக்கு ஒரு ஆதர வான குர லாகவே நோக்கப் பட வேண்டும். விடுதலைப் புலி களை தாம் ஆதரிக்கப் போவதில்லை என்ற கோட்பாடுகளை வரைந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உறவு களை வளர்த்துக் கொண்டு தமது அரசி யல் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களை முற்றாக புறந்தள்ளியிருந்தது.
தற்போது விடுதலைப்புலிகள் அற்ற ஒரு நிலை உருவாகியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையிலும், முட்கம்பி வேலிகளுக்குள் தினம் தினம் மரண வேதனைகளை அனுபவித்து வரும் மக்கள் தொடர்பாக தமிழகத்தின் தி.மு.க. அரசாங்கம் பராமுகமாகவே உள்ளது. இந்திய மத்திய அரசினதும் அதன் தோழமை கட்சியான தி.மு.க.வினதும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான போக்குகளுக்கு அப்பால் தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் பூகோள அரசியல் முனைவாக்கங்களை மேலும் வலுப்படுத்தி, தமது அரசியல் உரி மைகளை அதனுõடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின் றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற் பட்ட பல்முனைவு தன்மையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படு த்தி கொண்டதோ அதனை போலவே இந்த முனைவுத்தன் மையை இலங்கைத் தமிழ் மக்களும் தம க்கு சாதகமாக பயன் படுத்த வேண் டும் என்ற கட்டாயத் திற் குள் தள்ளப்பட்டுள் ளனர். ஈழத் தமிழ் மக்க ளின் விடுதலைப்போராட்டத்தை தனது பிராந்திய சுயநலன்க ளுக்கு பயன்படுத் துவ தன் மூலம் இலங்கை யைத் தனது ஆளு மைக்குள் கொண்டுவர முடியும் என்ற இந்தி யாவின் தத்துவம் 1987 களில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை மக்களுக்கு எதிரான விரோதப்போக்கை வளர்த்துக் கொண் டதே தவிர அதற்கான மாற்று வழியை தேட வில்லை.
ஆனால், இந்தக் காலப்பகுதியை சீனா தனக்கு சாதகமாக மிகவும் தந்திரமாக பயன்படுத்திக்கொண்டது. தென்னிலங்கை சீனாவிடம் பறிபோன நிலையில் வடக்கு, கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியா நம்பியது. ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 26 நாடுகளாக உடைப்பது எப்படி என்பது தொடர்பான சீனாவின் கொள்கைகள் இந்தியாவை ஆட்டங்காண வைத்துள்ளன. மேலும் இலங்கை தனது ஆளுமையில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டது என்ற கருத்துக்கள் இந்தியாவை ஆட்கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. எனவே தான் மாலைதீவில் கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இந்தியா தற்போது சிந்தித்து வருகின்றது. ஆனால், சீனாவின் கடற்படைப் பலத்திற்கு முன்னால் இந்தியாவின் கடற்படை மிகவும் பலவீனமானது. எனவே மாலைதீவில் நிறுவப்படும் இந்திய கடற்படைத் தளம் சீனாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது கேள்விக்குறியானது.
அமெரிக்காவுக்கு அன்றைய ஒரு சோவியத் ஒன்றியத்தை போல சீனாவின் எதிர்கால சோவியத் ஒன்றியமாக இந்தியா மாற்றமடைய போகின்றது என்ற அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளர்களை ஆட்கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், படைத் தளபதிகள் எனப் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன. இந்த நிலையில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது, சீனாவின் கடற்படைப் பலத்திற்கு ஈடுசெய்யவும் பலத்துடன் இந்தியக் கடற்படை இல்லை என தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்குமே தவிர சீனாவுக்கு இந்தியா ஓர் அச்சுறுத்தலாக இருக்க முடியாது என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அதன் வெற்றிக்கான முக்கிய காரணம் அதன் வலுவான கடற்படை கட்டமைப்புத் தான்.
இரண்டாம் உலகப்போரின்போது பேர்ள் துறைமுக கடற்படை தளத்தை ஜப்பான் துல்லியமாக தாக்கிய போதும் அமெரிக்காவின் கடற்படை முக்கிய கப்பல்கள் தப்பியதே இரண்டாம் உல கப்போரின் வெற்றியின் திருப்பு முனையாக அமைந்திருந்தது. இதனிடையே நேபாளத்தின் உள்விவகாரங்களில் சீனா தலையிட்டு அங்கு ஓர் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து வருவதாக இந்தியா கடந்த மே மாதம் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் நேபாளம் தனது நட்பு நாடு எனவும் அதன் அரசியல் உறுதிப்பாடு, அமைதி, பொருளாதார மேம்பாடு தொடர்பாகவே தாம் செயற்பட்டுவருவதாக சீனா இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சீனா இந்தியா மீது 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாக்குதலை மேற்கொள்ளலாம் என இந்திய ஆய்வாளர் பாரத் வர்மா தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவுடன் சீனா நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை.
மாறாக இந்தியாவின் உட்கட்டுமானங்களை உடைத்து பல நாடுகளின் உருவõக்கத்திற்கு மெல்ல மெல்ல வழிசெய்ய போகின்றது என்பதே தர்க்கமானது. ஏனெனில் இந்தியாவும், சீனாவும் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதையே குறியாக கொண்டுள்ளன. இந்த நிலையில் அவை ஒரு நேரடியான மேதலில் இறங்குவதற்கு துணியப்போவதில்லை. நேரடியான மோதல்கள் இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தலாம். எனவே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. எவ்வாறு சோவியத்தின் விவகாரங்களை கையாண்டதோ அதனைப் போலவே சீனாவின் அணுகுமுறைகளும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அதாவது, ஆசியாவில் இரண்டு வல்லாதிக்க நாடுகள் இருப்பதை சீனா விரும்பவில்லை. பல இன முரண்பாடுகளை இந்தியா கொண்டிருப்பதனால் அதன் உட்கட்டுமானங்கள் பலவீனமாக இருப்பது சீனாவின் திட்டத்திற்கு மிகவும் அனுகூலமானது. மேலும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்திய எதிர்ப்புணர்வுகளில் இருந்து சிங்கள மக்கள் சிறிதளவேனும் அசையவில்லை என்றே புலப்படுகின்றது. அதற்கு சிறிய உதாரணம் ஒன்றை இங்கு குறிப்பிடலாம். இந்து சமுத்திரம் என்ற பெயர் இந்தியாவை குறிப்பதனால் வருங்காலத்தில் இந்து சமுத்திரத்தின் பெயரை ஆசிய சமுத்திரம் (அண்டிச்ண Oஞிஞுச்ண) என மாற்ற வேண்டும் என சிங்கள மக்கள் பலர் தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் தோற்றம் பெற்றுவரும் இந்த பல்முனைவாக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் பங்களிப்புகள் எத்தகையது என்பதே தற்போதைய முக்கிய கேள்வி. ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையில் தற்போது அவர்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாகவும் சில நகர்வுகளை மேற்குலகம் மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. மேற்குலகத்தின் இந்த நகர்வுகளை நாம் உள்வாங்குவதன் மூலம் எம்மை ஒரு வலுவான சக்தியாக தென்ஆசிய பிராந்தியத்தில் நிலைநிறுத்தி கொள்ள முடியும்.
நன்றி -வீரகேசரிவாரவெளியீடு
Wednesday, September 02, 2009
தெற்காசிய பிராந்தியத்தின் பூகோள அரசியலில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்ன? - வேல்ஸிலிருந்து அருஷ்
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.