[புதன்கிழமை, 13 மே 2009,] சிறிலங்காவின் மலையக பிரதேசமான வட்டவளை முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலையும் கோயிலின் பாதுகாப்பு சுவர்களும் சிங்கள காடையர்களினால் நேற்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் குறித்த ஆலயப் பகுதிக்குச் சென்ற 50-க்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் இரும்பிலான ஆயுதங்கள் கொண்டு பிள்ளையார் சிலை, கோயிலின் மதில் ஆகியனவற்றை இடித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட முருகன் கோயிலின் பிரதம குரு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஹற்றன் காவல்துறையினரிடம் முருகன் கோயில் நிர்வாக சபையினர் இன்று முற்பகல் முறைப்பாடு செய்துள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த கோவிலின் சிலை வைக்கப்பட்டிருந்த காணி ஆலயத்திற்கு சொந்தமானதாகும். ஆகவே, இனவாத சக்திகள் வேண்டும் என்றே அடித்து உடைத்து நாசமாக்கி உள்ளதாக நிர்வாக சபையினர் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டில் குற்றம்சாட்டியுள்ளனர். சிங்கள பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு சிங்கள இளைஞர் குழு ஒன்று விடுத்த அச்சுறுத்தலால் இரத்னபுரி இறக்குவானை சிறீ முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.