[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009]
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரச தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் வேறொரு தலைமையின் கீழ் மீண்டும் போராட்டத்தை தொடக்க முயற்சி செய்யலாம். அதைத் தடுக்கும் வகையில் இராணுவத்தில் கூடுதலாக ஒரு இலட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள்.
எனவே, இதன் மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மொத்தம் 3 இலட்சமாக உயரும்.
விடுதலைப் புலிகள் முன்பு போல் இனி இலங்கையில் ஒன்றிணைவது சுலபமல்ல. இதுவரை 22 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது 9 ஆயிரம் பேர் சரணடைந்துவிட்டனர்.
இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.
Tuesday, May 26, 2009
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்க முடிவு: இராணுவத்தளபதி பேட்டி
Tuesday, May 26, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.