[வியாழக்கிழமை, 07 மே 2009] வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் தன்னாட்சியையும் இறைமையையும் மீள உறுதிப்படுத்த மக்களால் நடத்தப்படும் வாக்குப்பதிவு நோர்வேயில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு தனிநாடே விடிவினைக் கொண்டு வரும் என்பதை உறுதியாய் கொண்டு நடத்தப்படும் வாக்குப்பதிவில் நோர்வே வாழ் தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஈழத் தமிழர் தன்னாட்சியையும் இறைமையையும் நோர்வே வாழ் மக்களின் தீர்ப்பால் மீள உறுதிப்படுத்துவோம். தனிநாட்டு உரிமைக்காகவும், நீதிக்காகவும், அவல வாழ்வில் இருந்து மீண்டு வரவும் ஒன்றிணைவோம். நாளாந்தம் ஈழத்தில் நம் தமிழ் உறவுகள் படும் துயர்நீக்க இணைந்திடுவோம். இறுதி நேரம் வரை காத்திராமல், முன்கூட்டியே வந்து வாக்களிப்பதன் மூலம் இறுதி நேர சிரமங்களைத் தவிர்க்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாள்: 10.05.2009 (ஞாயிற்றுக்கிழமை) இடங்கள்: ஓஸ்லோ, பேர்கன், துரொன்டெய்ம், ஸ்ரவங்கர், ஓக்சலன்ட் utrop அமைப்பு முன்னெடுக்கும் இந்த வாக்கெடுப்பில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilvalg.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்க்கவும்.
Thursday, May 07, 2009
வட்டுக்கோட்டை பிரகடனத்தை மீள உறுதிப்படுத்த நோர்வேயில் வாக்குப்பதிவு
Thursday, May 07, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.