[சனிக்கிழமை, 02 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் ஒரு வாரத்தில் 9 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளையில் பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர். உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக - சிறிலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்ற போதும், இப்பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் பீரங்கிகளால் தாக்குவதால், உணவு விநியோகப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. இந்நிலையில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த சூழலில் சிறிலங்கா படையினரின் கனரக துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆனால், தாம் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதாகவும், இந்த பொருட்களை எடுக்காது சென்றால் தமது பிள்ளைகள் பட்டினியால் சாக நேரிடும் என்று மக்கள் அழுது கெஞ்சும் நிலையே அங்கு காணப்படுவதாக 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Saturday, May 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.