Saturday, May 02, 2009

வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்

[சனிக்கிழமை, 02 மே 2009] வடபகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அராசங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் உதவிகளை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர கூடாரங்கள் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் நோர்வே அரசாங்கம் வடபகுதி இடம்பெயர் மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.