[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009]
ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து பேர்ண் வெளிவிகார அமைச்சின் அலுவலகமுன்பாக காலவரையற்ற நீர் ஆகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக உண்ணாநிலைபோராட்டம் முன் எடுக்கப்படவுள்ளது
.
தமிழரை வாழவிடு!
வன்னியில் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு
வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி
சிறி லங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி
பிரிந்து செல்வதா இல்லையா என ஈழத் தமிழரின் கருத்தறிய ஐ.நா. தலைமையிலான சர்வசன வாக்கெடுப்பு
இவை எதுவும் சாத்தியமில்லாதவிடத்து தமிழரின் சுய நிர்ணய உரிமையை சுவிஸ் அரசு உட்பட அனைத்துலக சமூகம் அங்கீகரித்தல்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர்
திரு. கிருஸ்ணா அம்பலவாணர்
மேற்கொள்ளும் நீராகாரம் எதுவுமின்றி சாகும் வரை உண்ணாவிரதம்.
காலம்: 13 ஏப்ரல் 2009 திங்கட்கிழமை காலை 10:00 மணி
இடம்: Hirschengraben, Bern (சுவிஸ் வெளிநாட்டு அமைச்சுக்கு அருகே)
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பேரழிவே விழையும்!
வாரீர்! கரம் கோரீர்! தமிழரின் உயிர்காப்போம்!
மேலதிக தொடர்புகட்கு
078 736 18 38
078 870 33 05
கிருஸ்ணா அம்பலவாணர்
இணைப்பாளர்
தமிழர் பேரவை
சுவிற்சர்லாந்து
Zieglerstrasse 30
3000 Bern 14
info@tamilforum.ch
Her Excellency Ms. Micheline Calmy-Rey
Federal Department of Foreign Affairs
Switzerland.
13.04.2009
இன்று இலங்கைத் தீவிலுள்ள தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிகப் பெரும் மனித அவலம் இவ்வுலகின் மானிட நாகரிகத்தின் வரலாற்றில் மீண்டும் குருதிக் கறைபடிந்த பக்கங்களாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழர் தாயகத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழ்க் குழந்தைகள் சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பிராந்திய புகோள அரசியலின் நலன்களுக்காக வரலாற்றின் மறக்கப்பட்ட இனவழிப்பின் சாட்சிகளாகியுள்ளனர். இதுவரை தமது சக மானிட வர்க்கத்தின் அழிவுக்காக குரல் கொடுக்காத சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தொடும் ஓர் அமைதிவழி முயற்சியாக நான் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ளத் துணிந்துள்ளேன். தமிழர் தாயகத்தில் அழிந்துகொண்டிருக்கும் தழிழ் இனத்தின் மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சியின் ஓர் பகுதியாக இதை ஆரம்பிக்கிறேன்.
இவ்வருட ஆரம்பத்திலிருந்து இன்று வரை மிகக் குறுகிய காலப்பகுதியில் 3000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இணைத்தலமை நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சிறீலங்காவின் இறைமை மற்றும் பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை ஒடுக்கும் சிறீங்கா அரசுக்கு துணைநிற்கின்றனர். சர்வதேசத்தின் இப்போக்கு தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுவாக ஆழப்பதிந்துவிட்டது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தமது பாரம்பரிய தாயகத்தில் சுதந்திரமாக தமது அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மானிடனுக்கும் உரித்தான உயிர் வாழுவதற்கான உரிமை கூடத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக காட்ட முயல்வது தமிழ் மக்களின் மனங்கைளை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது.
இன்று இந்தியாவும் இணைத்தலமை நாடுகளும் தமது போக்கினை மாற்றிக்கொள்ளாவிட்டால் இலங்கைத்தீவில் தமிழர் தாயகம் மீண்டும் ஓர் செர்பனிகாவையும் ருவாண்டாவையுமே உருவாக்கத் துணைநிற்கும். இன்று தமிழர் தாயகத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் பொஸ்பரஸ் குண்டுகள் சிறீலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றமை குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது மிகவும் கடும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கருவறையிலிருக்கும் குழந்தையிலிருந்து அப்பாவிச்சிறார்கள் நோயாளிகள் அனைவருமே கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகள் மக்கள் வாழிடங்கள் அகதி முகாம்கள் பாடசாலைகள் அனைத்துமே வான் மற்றும் ஆட்லறி குண்டு வீச்சுகள் மூலம் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்ணக்கில் மக்கள் மிகவும் அவலமான முறையில் கொல்லப்படுகின்றர்.
இவ்வாறானதோர் மனிதப் பேரழிவு தமிழர் தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சர்வதேச சமூகம் இம் மனித அவலத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது தார்மீகக் கடப்பாட்டை புறக்கணிக்கமுடியாது. சிறீலங்கா அரசுக்கெதிராகப் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ உதவிகளை நிறுத்துதல் சர்வதேசரீதியான தீவிர இராஐதந்திர முன்முயற்சிகளை முன்னெடுத்தல் மூலமாக இப்பேரவலம் நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட முடியும் எனத் தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். சுவிஸ் அரசாங்கம் nஐனீவா உடன்படிக்கைகளின் அமுலாக்கத்துக்காக முன்நிற்கும் அரசு என்ற முறையிலும் தமிழீழவிடுலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்தும் இடையிலான பேச்சுகளை தனது நாட்டில் முன்னெடுக்க துணைநின்றதன் அடிப்படையிலும் நாம் சுவிற்சர்லாந்து அரசினை இச்சர்வதேச இராஐதந்திர முன்முயற்சிகளுக்கு ஊக்கமளித்து இம்மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
தனிமனித விழுமியங்களையும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதநேயச் சட்டங்களையும் போற்றிப்பேணும் சுவிஸ் அரசு எனது சாகும் வரையான உண்ணாவிரதப்போரை இடைமறிக்காது எனது அகிம்சைவழி தழுவிய முயற்சிக்கு ஒத்துழைப்புடன் செயற்படும் என நானும் எமது மக்களும் உறுதியாக நம்புகின்றோம். இது எனது தனிமுயற்சிக்கப்பால் இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் ஒன்றுபட்ட ஒருமித்த நீதிக்கான அமைதிவழிப்போராட்டம் என்பதை சுவிற்சர்லாந்து அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என அனைத்து தமிழ் மக்களின் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறானதோர் புறச்சூழலில் பின்வரும் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக சுவிற்சர்லாந்து அரசுக்கு முன்வைத்து நான் நீராகாரம் இன்றி சாகும் வரை உண்ணாவிரதத்ததை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளேன்.
வன்னியில் தொடரும் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு
வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி
பிரிந்து செல்வதா இல்லையா என ஈழத் தமிழரின் கருத்தறிய ஐ.நா. தலைமையிலான சர்வசன வாக்கெடுப்பு
இவை எதுவும் சாத்தியமில்லாதவிடத்து தமிழரின் சுய நிர்ணய உரிமையை சுவிஸ் அரசு உட்பட அனைத்துலக சமூகம் அங்கீகரித்தல்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுதல்.
இப்படிக்கு உண்மையுடன்
கிருஸ்ணா அம்பலவாணர்.
Monday, April 13, 2009
வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் திரு. கிருஸ்ணா அம்பலவாணர் சாகும்வரை உண்ணாவிரதம்
Monday, April 13, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.