[செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009]
இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
ஐ. நா. பேரவை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயலுகிறது. 2000 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது.
25 ஆண்டுகாலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன் வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலும் வருகிற ஏப்ரல் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி அஞ்சலி செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
அமைதி அஞ்சலி செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
Tuesday, April 21, 2009
ஈழத் தமிழர் படுகொலை கறுப்புக்கொடி ஊர்வலம் மற்றும் அமைதி அஞ்சலிக்கு அழைப்பு - பழ.நெடுமாறன்
Tuesday, April 21, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.