[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009]
பாதுகாப்பு வலயங்களான புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இராணுவத்தினர் கடந்த 20 ஆம் திகதி பாரிய படை நடவடிக்கையை ஆரம்பித்தனர். புலிகளின் பல பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58 ஆம் மற்றும் 53 ஆம் படையணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இன்று ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"படை நடவடிக்கைகள் உரிய காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்டும், மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர்வதால் அவர்களின் நலன்கருதி, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்த பின்னரே படை நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மற்றும் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது விடுதலைப்புலிகள் 8 கிலோமீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
எமது படை நடவடிக்கைகளின் போது, விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலியன்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு பாரிய ஆயுதங்கள் எதனையும் படையினர் பயன்படுத்தவில்லை.
இப்படை நடவடிக்கைகளின் போது படையினருக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து நேற்றைய தினம் 36,718 பொதுமக்களைப் படையினர் மீட்டனர். இன்று 3,603 பொதுமக்கள் வந்து சேர்ந்துள்ளனர். கடந்த இரு நாட்களில் 61,603 பேர் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் .
தற்பொழுது புதுமாத்தளன் வைத்தியசாலை உட்பட பல பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன" என்றார்.
Wednesday, April 22, 2009
புலிகளின் பல பகுதிகள் இன்று படையினர் வசம்: பிரிகேடியர் உதய நாணயக்கார
Wednesday, April 22, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.