[வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009]
எந்தவிதமான காரணங்களும் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு காவல்துறையினர் என்னை கைது செய்தனர் என்று விடுதலை செய்யப்பட்ட 'உதயன் மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசியரியர் ந.வித்தியாதரன் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ் செயற்படும் நான்கு விசாரணைப் பிரிவினர் கடந்த 58 நாட்களாக விசாரணை செய்தும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை.
அது பற்றிய விபரங்கள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை அடுத்தே நீதிமன்றம் தன்னை விடுதலை செய்ததாக வித்தியாதரன் கூறினார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 நிமிடத்தில் விடுதலை செய்யப்பட்ட வித்தியாதரன் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் கடந்த பெப்ரவரி 20 ஆம் நாள் கொழும்பில் நடத்திய வானூர்தி தாக்குதல் தொடர்பில் எனது செல்லிடப்பேசி இலக்கத்துக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் தொலைபேசி எடுத்தனர் என்பதுதான் தன் மீது சுமத்தப்பட்ட பாரிய குற்றச்சாட்டு.
ஆனால் விசாரணையின்போது அப்படி எதனையும் காவல்துறையினரால் நிரூபிக்க முடியவில்லை என்று வித்தியாதரன் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் அரசியல் உள்நோக்கத்தின் ஏவுதலின் காரணத்தால் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினரால் வேண்டும் என்றே சந்தேகப்பட்ட சில முக்கிய தொலைபேசி இலக்கங்கள் கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களுடையது என்றும் வித்தியாதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு வரும் ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற முறையில் என்னை கைது செய்தனரே தவிர வேறு எதவும் இல்லை என்றும் வித்தியாதரன் மேலும் எடுத்துக் கூறினார்.
Friday, April 24, 2009
அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே என்னை கைது செய்து விடுவித்தனர்: ந.வித்தியாதரன்
Friday, April 24, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.