Tuesday, April 14, 2009

அனுசரணையாளர் என்ற தகுதி நிலையை மூன்று வருடங்களுக்கு முன்னரே நோர்வே இழந்துவிட்டது: உயர் இராஜதந்திரி கருத்து

[செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2009] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் மூன்று வருட காலத்துக்கு முன்னர் முறிவடைந்துவிட்ட போதே சமாதான அனுசரணையாளர் என்ற பாத்திரத்தை நோர்வே இழந்துவிட்டது என நோர்வேயின் உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகள் முறிவடைந்து விட்டதால் அதன் பின்னர் அனுசரணையாளர் என்ற முறையில் சமாதான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடிய நிலையில் நோர்வே இருக்கவில்லை எனவும் இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவராகப் பணிபுரிந்த ஜோன் ஹன்சன் பௌயர் தெரிவித்திருகின்றார். சமாதான அனுசரணையாளர் என்ற தகுதி நிலையில் இருந்து நோர்வேயை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.