Thursday, April 16, 2009

மகிந்த கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் கிளிநொச்சிக்கு திடீர் பயணம்

[வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009] சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கிளிநொச்சிக்குச் சென்றிருந்தது. புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில் வன்னி போர்க்களத்தில் உள்ள படையினரை நேரில் சந்திப்பதற்காகவே மகிந்த இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன ஆகியோரும் மகிந்தவுடன் கிளிநொச்சிக்கான இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர். இவர்களின் பயணத்தை முன்னிட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழமையைவிட அதிகளவுக்குப் பலப்படுத்தப்பட்டிருந்தன. உலங்குவானூர்திகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இவர்களின் இன்றைய பயணம் இடம்பெற்றிருந்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.