[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009]
சிறீலங்கா இனவெறிஅரசு, தனது ஆக்கிரமிப்பு அழிப்புப்படைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளியவாறு ஒரு பாரிய தமிழின அழிப்பை ஆரம்பித்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையில் ரொரன்ரொவின் அமெரிக்க துணைத்தூதரக முன்னால் பல்லாயிரத்தில் திரண்ட கனடிய தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி முற்றுகை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரொறன்ரோ அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக ஏப்ரல் 23ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 12 மணிமுதல் நாள்தோறும் இரவு பகலாக தமிழ் இளையவர்களால் ஆரம்பமான மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு கனடிய தமிழ் மக்களின் பெரு வருகையால் திங்களன்று பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் நிரம்பியது.
ஆனால் மக்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வந்து சென்றவண்ணமுள்ளதால்
கலந்துகொள்பவர்களின் தொகை இருபதினாயிரத்துக்கு மேற்பட்வார்கள் என சுயாதீன ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.
ரொரன்ரோ அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் ரொறன்ரோ நகரை ஊடறுத்துச் செல்லும் பெரு வீதியான யூனிவசிற்றி அவெனியூ (ருniஎநசளவைல யுஎநரெந) பத்தாயிரத்துக்குமேற்பட்ட மக்களின் திரட்சியால் முடக்கப்பட்டுள்ளதாக எமது ரொரன்ரோ நிருபர் அறியத்தருகின்றார். இவ்வீதி குயின் வீதியிலிருந்து டன்டாஸ் வீதி வரை முடக்கப்பட்டுள்ளது. இதனை ஊடறுத்துச்செல்லும் குறுக்கு வீதிகளும் முடக்கப்பட்டுள்ளது.
29ம் திகதி ஜ நா சபையில் சிறிலங்கா அரசின் மனிதப்படுகொலை சம்பந்தமான விவாதம் நடைபெறவுள்ளதால் 28ம்,29ம் திகதிகளில் மிகப்பெருமளவில் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.இதனால் ரொறன்ரோ மாநகரம் செயலிழக்கும் நிலை தோன்ற வாய்ப்புள்ளதாக அறியப்படுகின்றது.
இதேவேளை அமெரித்த தூதரகத்தை மையப்படுத்தி மொன்றியல், ஒட்டாவா, கல்கரி போன்ற கனடாவின் பெருநகரங்களிலும் தமிழ் மக்கள் கவனயீர்பில் ஈடுபடுவதாக தவகல் வெளியாகியுள்ளது.
தம் உறவுகளின் படுகொலைகள் சர்வதேசத்தால் முழுமையாக நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் உறுதியுடனும், உத்துவேகத்துடனும் முன்னெடுக்கப்படும் என கனடியத்தமிழ் இளையோர், கனயடித் தமிழ் சமூகத்துடன் இணைந்து உறுதிபூண்டுள்ளனர் என எமது நிருபர் மேலும் அறியத்தந்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.