Wednesday, April 08, 2009

படுகாயமடைந்த மேலும் 536 பேர் இன்று கப்பல் மூலம் புல்மோட்டை கொண்டு வரப்பட்டனர்: மூவர் வழியில் மரணம்

[புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009] வன்னியில் தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 536 பேர் இன்று புதன்கிழமை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன், கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 'கிறின் ஓசன்' என்ற கப்பலின் மூலம் புல்மோட்டையில் உள்ள இந்திய இராணுவத்தின் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் மூவர் பிரயாணத்தின் போதே மரணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் அளவில் புதுமாத்தளனில் இருந்து புறப்பட்ட கப்பல் இரவே புல்மோட்டைப் பகுதிக்கு வந்ததாகவும், கப்பலில் வந்தவர்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களால் படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்களே இவ்விதம் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.