Sunday, March 01, 2009

வித்தியாதரன் கைது: மூத்த தமிழ் ஊடகவியலாளர்களிடமும் விசாரணை

[ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. அதேவேளை, ஆங்கில ஊடகங்களில் பணியாற்றும் மூத்த தமிழ் ஊடகவியலாளார்கள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் கைது விடயத்தில் ஏனைய மூத்த ஊடகவியலாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை இதுவே முதற்தடவை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மிகவும் சிநேகிதமான முறையில் தனித்தனி விசாரணைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. வித்தியாதரனுடன் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட தொலைபேசி தொடர்புகள் தொடர்பாகவும் மற்றும் சொந்த ஊர், நிரந்தர முகவரி தொலைபேசி இலக்கங்கள் பதியப்பட்டு சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளே கூடுதலான விசாரணக்கு உட்படுத்தப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கத்தை மேற்கோள் காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.