Sunday, March 29, 2009

விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம்ஸ் பேச்சு: சிறிலங்கா அரசு சீற்றம்

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதானது அல்ல எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போது அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக தகவல்களை நாம் பெற விரும்புகின்றோம். ஆனால், அது குறித்த உறுதியான தகவல் எதுவும் எம்மிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாபனுக்கும் ஜோன் ஹோல்ம்சுக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலை நோர்வேயே ஏற்படுத்தி கொடுத்திருந்ததாக விமல் வீரசன்ச குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.