Sunday, March 29, 2009

நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] நோர்வேயிலுள்ள சீன தூதரம் முன்பாக நோர்வேவாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசின் போர் பற்றிய விவாதத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்து சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சீனா ஒரு பெளத்த நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியாக சிறீலங்கா அரசுக்கு படைத்துறை, மற்றும் பாரிய நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் ஏற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதிகளவில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் கீழே: நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் காலம்: 31.03.2009 செவ்வாய் பிற்பகல் 2மணி முதல் 3மணி வரை இடம்: சீன தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo) • ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் (UN Security Council) தமிழீழ மக்களின் நிலைமை தொடர்பான விவாதங்களை புறக்கணிக்காது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரியும், • சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திடுமாறும், • சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும், சீன அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் முகமாக இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பு: Tuengen Alle 2B எனும் முகவரியில் சீனத் தூதரகம் அமைந்துள்ளது. Frognerseteren ஐ நோக்கிக்செல்லும் 1ஆம் இலக்க நிலக்கீழ் தொடரூந்து (T-bane) மூலம் Vinderen தரிப்பிடத்தில் இறங்குவதன் மூலம் சீனத் தூதரகம் அமைந்துள்ள Tuengen Alle 2Bஐ சென்றடையலாம். (T-bane 1 mot [Frognerseteren ], Gå av på Vinderen stasjon. Gangvei fra Vinderen til Tuengen allé 2B ca . 4 minutter)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.