Tuesday, February 17, 2009

அக்கினியில் சங்கமமான வீரப் புதல்வர்களுக்கு மெல்பேர்ணில் மலர் வணக்கம்

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009] உக்கிரமடைந்துள்ள சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்பு நடவடிக்கையால் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி தமிழ் மக்களின் அழிவு குறித்து தொடர்ந்தும் மெளனமாக இருந்து வரும் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் வகையில் தம்மை தாமே அக்கினியில் கரைத்துக்கொண்ட வீரப்புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. ஹைடில்பேர்க் சென். ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (19.02.09) மாலை 7:00 மணியளவில் இந்த மலர்வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் வீரப் புதல்வர்களுக்கும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தாயக ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மலர்வணக்கம் செலுத்தப்படுவதுடன் நினைவுரைகளும் இடம்பெறவுள்ளன. மெல்பேர்ண் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும்படி நிகழ்வு ஏற்பாட்டாளர்களான அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.