Saturday, February 14, 2009

ஐ.நா. முன்றலின் முன்பாக தமிழ் இளைஞர் தீக்குளித்து மரணம்

[வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009] இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார் காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞர் லண்டனில் வசிப்பவர் எனவும், இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும், இவருக்கு 27 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று 14.00 மணியளவில் ஐ. நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.