[வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009]
வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் "மக்கள் காப்பு வலய" பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர்.
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 358 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தளன் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகையிலேயே உயிரிழந்து விட்டனர்.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Friday, February 13, 2009
(2ம் இணைப்பு)ஒரே நாளில் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது வீசியது சிறிலங்கா: நேற்று 132 தமிழர்கள் படுகொலை: 358 பேருக
Friday, February 13, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.