[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,]
கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவருடன் மத்திய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான முழு விபரங்களையும் நான் அவரிற்கு எடுத்துக்கூறினேன். இதன்போது தமிழ் மக்கள் குறித்த மத்திய அரசின் கரிசனை வெளியிடப்பட்டதையும் நான் அவரிற்கு சுட்டிக்காட்டினேன். இது தொடர்பில் அவர் தனது திருப்தியை வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதற்கும் சம்மதித்தார்.
இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
அண்டை நாடென்ற வகையில் இலங்கைக்கு இலகுரக இராணுவ தளபாட உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. இவ்வுதவியின் கீழேயே ராடர் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகளையும் வழங்கியுள்ளோம் எனினும் இலங்கை இராணுவத்திற்கு எந்தவித இராணுவ பயிற்சிகளையும் இந்தியா வழங்கவில்லை
Monday, October 27, 2008
இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி
Monday, October 27, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.