[செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2008] மன்னார் மாவட்டத்தில் பெய்த அடைமழையினாலும் வெள்ளத்தினாலும் இதுவரை 11,015 குடும்பங்களை சேர்ந்த 40,004 பேர் பாதிக்கப்பட்டதோடு 16,321 ஏக்கர் நெற்பயிர்சேய்கை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மன்னார் பிரதேசசெயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 1515 குடும்பங்களை சேர்ந்த 40,004 பேர் பாதிக்கப்பட்டதோடு 16,321 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மன்னார் பிரதேசசெயலாளர் பிரிவுட்பட்ட பகுதிகளில் 1515 குடும்பங்களை சேர்ந்த 6359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1421 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டிமேல் தெரிவித்துள்ளார். இதேவேளை நானட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5200 குடும்பங்களை சேர்ந்த 17600 பேர் பாதிக்கக்கப்பட்டதோடு 10500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்திருப்பதாக நானட்டான் பிரதேச செயலாளர் திரு.திருஞான சம்பந்தர் தெரிவித்துள்ள இதேவேளை மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 4000 பேர் பாதிக்கப்பட்டதோடு 4400 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளது. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் 300 குடும்பங்களை சேர்ந்த 1290 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது
Tuesday, March 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.