[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008] மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 4 காவலரண்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிலிருந்த படைக்கலங்களையும் கைப்பற்றியுள்ளனர். மணலாறு கொக்குத்தொடுவாயில் உள்ள படைக் காவலரண்கள் இரண்டும், சிலோன் தியேட்டர்ப் பகுதியில் உள்ள காவலரண்கள் இரண்டும் விடுதலைப் புலிகளால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:00 மணிக்கு தாக்கப்பட்டன. இக்காவலரண்களுக்குள் நுழைந்து அதிரடித்தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள் படைத்தரப்பினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தினர். இத்தாக்குதலின் போது படையினர் அரண்களிலிருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். பின்னர் அந்த அரண்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சில மணிநேரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அரண்களிலிருந்த படைக்கலங்கள் மற்றும் படைப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி தமது நிலைகளுக்குத் திரும்பினர்.
Tuesday, January 01, 2008
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் 4 காவலரண்கள் மீது தாக்குதல்: படைக்கலங்கள் மீட்பு
Tuesday, January 01, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.