[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007] இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக உயர் ட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜோஸ் மனுவல் பராசோ மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்குபற்றிய இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆபிரிக்கா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் தோன்றியுள்ள நிலை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளின் அமைதி, பாதுகாப்பு, நல்லாட்சி, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றில் இருபெரும் ஜனநாயக நாடுகள் அதிக அக்கறை எடுத்து வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளதாகவும், அது வன்னியில் அல்லது கொழும்பில் என்று இலங்கையில் எப்பகுதியில் பகுதியில் இடம்பெற்றாலும் வருந்தத்தக்கது என்றும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வைத்திருக்கும் பிரித்தானியாவின் சிறிலங்காவிற்கான தூதுவர் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, December 01, 2007
இலங்கை நிலைமைகள் தொடர்பாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக ஆராய்வு
Saturday, December 01, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.