[திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2007]
விடுதலைப் புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல் எதுவும் இந்திய அரசிற்கு கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.விடுதலைப் புலிகளின் தலைவரின் 116 மெய்ப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை (வேடிக்கையென) என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந் திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் விமானத் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்பதற்கான நம்பகத்தன்மை மிக்க புலனாய்வுத் தகவல்கள் எதுவுமில்லை, எதனையும் நாம் முற்றாக நிராகரிக்காத அதே வேளை இலங்கையிலிருந்து வெளியாகும் இந்தத் தகவல்களை ஏற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது என இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Monday, December 24, 2007
விடுதலைப் புலிகளின் தலைவர் காயமடைந்தமை உண்மையா? இந்தியாவுக்கு தகவல் இல்லையாம்!
Monday, December 24, 2007
1 comment
Subscribe to:
Post Comments (Atom)
இதற்கெல்லாம் விடைசொல்ல களத்தின் யதார்த்த வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்னிற்பார்கள். ஏனென்றால் விடுதலைப்புலிகள் மறுப்பை ஏற்காமல், கள நண்பர்கள் மறுப்பை அங்கலாய்ப்பெனக் கூறுபவர்கள், இந்தியாவின் ஈழத்தமிழ் உணர்வு கொண்டவர்களைக் கொச்சைப்படுத்துபவர்கள், அவர்களிடமிருந்து விலகி நிற்கும்படி ஊக்கப்படுத்துதல் போன்று ஒரு இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் எல்லோரும் இப்போ கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தவர்கள்தான்.
ReplyDelete--------------------
இறைவன்